பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ரூபாயாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாயை அரசாங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செலவினங்களுக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் ஆரம்பத்தில் ஒதுக்கப்படும். இதன் மொத்தச் செலவு 12,000 மில்லியன் ரூபாவாகும்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.