சிவில் சேவைக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று திடீரென வடக்கு பயாகல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த இருவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
கட்டுகுருந்த விமானப்படை தள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews