21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

Share

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே, இன்று (16) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவே இவ்வாறான போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அதிகாரபூர்வ இணையதளம் fuelpass.gov.lk மட்டுமே என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பொது மக்கள் எரிபொருள் பாஸ் (Fuel Pass) தொடர்பான சேவைகளைப் பெறும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அங்கீகரிக்கப்படாத எந்தவொரு இணையதளத்திலும் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (16) காலை எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் அடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த எரிபொருள் கையிருப்புகள் மூலம், தற்போது நிலவும் விநியோக நெருக்கடியைச் சீர்செய்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

17 15
செய்திகள்இந்தியா

ரஜினிகாந்தை இழிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்:நாகேந்திரன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து...