பெற்றோல் விலை 25 ஆல் குறைந்தது!!

oil prices

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் பெற்றோல் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் இந்த விலைத்தள்ளுபடியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் இந்த பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்ளகளின் விலையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளார்.

மேலும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் விலைக்குறைக்கப்பட்ட பெட்ரோல் அம்மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த அதிரடி விலைக்குறைப்பு நான்கு சக்கர வாகனங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#WorldNews

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version