இலங்கை அரசாங்கம் இந்நாட்டுக் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை மனித உரிமைகள் மனுக்களை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இரு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் இன்று (அக்டோபர் 17) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த மனுக்களைத் தொடர முடியாது எனக் கருதி, அவற்றை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய முடிவெடுத்தது.