தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது மேற்படி சட்டமூலத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, விவாதத்துக்குச் சமர்ப்பித்தார்.
ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்த பின்னர், திருத்தங்கள் சகிதம் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்குச் சபாநாயகர் சான்றுரை வழங்கிய பின்னர், அது அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews