2022 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் ஆண்டு 401,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.
கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பயிற்சி பணியாளர்களை தமது நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
38 மில்லியனாக மக்கள் தொகையை கொண்டுள்ள கனடா வருடந்தோறும் அதனை 1% ஆல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவுள்ளது.
#WorldNews