செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

Share

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி இந்த முறை அது நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் உரையில் ,முந்தைய அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தும் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டன. அந்தத் தவறுகளைத் தற்போதைய அரசாங்கம் மீண்டும் செய்யாது என அவர் உறுதியளித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து விரிவான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.

அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய, ஒற்றுமையான மற்றும் பிளவுகளற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.

இனப்பிரச்சினை என்பது நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றாலும், இது தொடர்பாகச் சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதித்து, அவர்கள் மீது சிதைந்து போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த அரசாங்கத்தின் பலம் என அமைச்சர் தெரிவித்தார். “நாங்கள் வழங்குவது வெறும் வாக்குறுதி அல்ல; அதைச் செயல்படுத்திக் காட்டும் அரசாங்கமாக இருப்போம்” என அவர் தனது உரையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...