யாழ்ப்பாணம் – குருநகர்ப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்த யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.