பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றமை மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
விசா இன்றி தங்கியிருந்தமை: 2016 ஜூலை 14 முதல் 2020 நவம்பர் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை.
கடவுச்சீட்டு மோசடி: குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குப் பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை.

