கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர்களாக தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், கோபா குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண ஆகியோர் நடுநிலையாக செயற்படுகின்றனர். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர்.
அதனால் இவர்களை மாற்றும் நோக்கில் ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்சக்கள் செயற்படுவதாக அவர் மேலும் குற்றம் சாற்றினார்.
புதிய நாடாளுமன்ற அமர்வில் இவ்விரு குழுவுக்கான புதிய ராஜபக்சக்கள் நியமிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews