13 30
இந்தியாசெய்திகள்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

Share

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ராகுல் என்ற சிறுவனை பற்றி பேசியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.

நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்” என்றார்.

இதில், விஜய் குறிப்பிட்ட ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த சிறுவன் அளித்த பேட்டியில், “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலம், ஏரிகள், பள்ளிகள் மட்டுமே போதும். விமான நிலையம் வந்தால் நாங்கள் என்ன மேலேயே பறக்க போகிறோம்.

விமான நிலையம் வந்தால் பள்ளி பாதிக்கப்படுகிறது. அவங்க பசங்க மட்டும் படிக்கனுன்னு நினைக்கிறாங்க. நாங்கள் படிக்க வேண்டாமா? ஏரி இருந்தால் தான் வெயில் காலத்தில் நாங்க இங்க வந்து குளிப்போம்” என்று பேசினார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...