25 69181b7d5dd1e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கில் ‘விதைகள் உறங்குவதில்லை’ திட்டத்தின் கீழ் பனை விதை நடுகை ஆரம்பம்!

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகைத் திட்டம் இன்று (நவ 15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களான அ. ரெஜி, விமலவன் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...