இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 540 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பட்டு புதிய விலையாக 1,345 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment