19 2
இந்தியாசெய்திகள்

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

Share

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம்(Wasim Akram) கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இது நேரடியாக விதிக்கப்பட்ட தடை அல்ல என்றாலும், இந்த மறைமுகத் தடை இன்று வரை நீடிக்கிறது. இதனை விட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் அளித்தாலும் எந்த அணியும் அவர்களை வாங்க முன்வரவில்லை.

இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், தற்போதைய வர்ணனையாளர்களாக இருக்கும் வாசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா போன்றோரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வந்தனர்.

வாசிம் அக்ரம் ஆரம்பத்தில், சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற, சர்வதேச ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது அவுஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார்.

அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தாம், ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார். இதன்போது வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது,எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...