நாட்டில் சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, மரக்கறி மற்றும் பால்மாக்களுக்கான விலையேற்றத்தாலும் தட்டுப்பாடுகளாலுமே பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிலும் இவ்வாறு சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அத்தோடு 5 ஆயிரத்துக்கு அதிகமான வீதியோர வடை, கடலை கடைகளும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews