தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.