இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) தனது சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, நாட்டின் தற்போதைய சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது நாட்டில் உள்ள சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு (1 in 3 households) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குகின்றது.
போதிய வருமானம் மற்றும் உணவு விநியோகத் தடைகள் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது அன்றாட உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்கள், சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவின்றி பல்வேறு தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களின் நலன் மற்றும் போசாக்கினை உறுதி செய்யச் சர்வதேச சமூகமும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.