காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 322 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 153 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 17 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 31 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,528 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

