Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

Share

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக இதுவரை 2,140 தம்பதியினர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பல இலட்சம் ரூபாய் செலவிட வேண்டிய இந்தச் சிகிச்சையை, அரச துறையில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள தம்பதியினரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் கமல் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்களின் வயது மற்றும் ஆரோக்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும்.

இலவச IVF சிகிச்சைக்கான பிரத்யேகக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. எனினும், இதற்கான அதிநவீன ஆய்வுக்கூட (Lab) வசதிகளை அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. இதற்கான ஒப்பந்ததாரர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கூடப் பணிகள் நிறைவடைந்ததும் சிகிச்சைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் இலவச IVF சிகிச்சையை வழங்கும் முதலாவது மருத்துவமனையாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை வரலாற்றில் இடம்பிடிக்கும். இதன் மூலம் வறிய மற்றும் நடுத்தர வர்க்கத் தம்பதியினர் தங்களின் குழந்தைப்பேறு கனவை நனவாக்கிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...