இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் T-56 ரக துப்பாக்கிகள் 67, கைத்துப்பாக்கிகள் (Pistols) 73, ரிவால்வர் ரக துப்பாக்கிகள் 50, ஏனைய ஆயுதங்கள் 1,907 மீட்கப்பட்டுள்ளது.

