இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (13) காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகக் கடந்த சில ஆண்டுகளாகப் பணியாற்றிய ஜூலி சங், எதிர்வரும் ஜனவரி 16-ஆம் திகதி இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வமாகப் புறப்படவுள்ளார்.
இச்சந்திப்பின் போது, ஜூலி சங்கின் பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெகுவாகப் பாராட்டினார். மேலும், அவரது எதிர்காலப் பணிகள் சிறக்கத் தனது நல்வாழ்த்துகளையும் அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.
இலங்கையின் மிக நெருக்கடியான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் போது அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங், இலங்கையின் மீட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகிறார்.