அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தலாவ மற்றும் தம்புத்தேகம ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது அந்தப் பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்களில், நேற்று (நவ 10) ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்துத் தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.