நெதர்லாந்திற்குள் புகுந்தது ஒமிக்ரான்!

Omigron enters the Netherlands

Netherlands!

நெதர்லாந்திற்குள் ஒமிக்ரான் புகுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்ஆப்பிரிக்காவில்லிருந்து விமானம் மூலம் நெதர்லாந்துக்கு வந்த பயணிகள் 624 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர்களில்13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது.

ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்திலும் மிக விரைவில் கட்டுப்பாடுகள் அமுலில் வருமென அந்நாட்டரசு தெரிவித்துள்ளது.

#world

Exit mobile version