ஒமிக்ரோனின் உயிர்கொல்லி பிறழ்வு இந்தியாவில்!!

119501962 f69bcdfd 3cfb 40c4 af06 6410c96f93d1

ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற உயிர்கொல்லி பிறழ்வு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கருதி வரும் நிலையில், அந்த எண்ணத்தை புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கேள்விக்குறியாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறியதாவது:-

ஒமைக்ரான் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

பி.ஏ.2. மாறுபாடு ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும்.

பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும். இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. என்றார்.

#WorldNews

Exit mobile version