ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரோன் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை , அமெரிக்காவில் என்டெக் நிறுவனம் செய்த முதல்கட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரோன் வைரஸுக்கு எதிராகக் இரு டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தினால் குறிப்பிட்ட அளவு மாத்திரமே செயற்படும் எனவும் தெரியவந்துள்ளது.
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றம் இன்று 40 மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் சர்வதேச நாடுகள் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
Leave a comment