அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் ஒமைக்ரோன்!!

virus outbreak omicron unknowns

அமெரிக்காவில் 24 மணித்தியாலயங்களுக்குள் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை  8 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையாக டெல்டா வைரஸின் பிடியில் இருந்து அமெரிக்கா வெளிவராத நிலையில் இந்த புதிய உருமாற்றமான ஒமைக்ரோன் வைரஸின் பாதிப்பு அமெரிக்கர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒமைக்ரானால் கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே , அடுத்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும், அதன் பரவல், பாதிப்பு குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Exit mobile version