ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் சாத்தியமாக்கலாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கொரோனா தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி 6 மாதங்களுடன் குறைவடைந்து செல்கின்றன. அதன் காரணமாகவே பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இலங்கையில் பெரும்பாலானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் விளைவாக ஒமிக்ரோனின் தாக்கம் குறைவு என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews