உலகை அச்சத்துக்குள்ளாக்கிய ஒமைக்ரோன் வைரஸ் அமெரிக்காவில் கலிபோர்னியாவில்ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு அவரது மாதிரி மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலேயே அவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதாரதுறை , அவர் முழுமையாக 2டோஸ் தடுப்பூசிகளையும் ஏறியவர் என்பதை சுட்டிகாட்டியுள்ளது.
ஒமிக்ரோன் வேகமாக பரவகூடிய வாய்ப்பு இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அமெரிக்க தொற்றுநோயியல் நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார தாபனமும் ஒமிக்ரோன் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வருவதுடன், உலக நாடுகள் தனது எல்லைகளை மூடி நாடுகளுக்குள் வெளிநாட்டவரின் உள்நுழைவை தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
#WorldNews