டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து உட்பட பல தொடருந்துகள் 20 ஆம் திகதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தினமும் இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து, மறுநாள் காலை 5.19க்கு திருகோணமலை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் தொடருந்து, மறுநாள் அதிகாலை 4.32க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.