தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இன்று முல்லைத்தீவு கரையைத் தாண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை முல்லைத்தீவுக்கு 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்த இது, இன்று மாலை கரையைக் கடக்கும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

