பருத்தித்துறையில் 48 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி: நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அடிக்கல் நாட்டினார்!

IMG 1357 1080

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சுடலை வீதியை புனரமைப்பதற்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் 5:30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 48 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பின்வரும் அதிகாரிகளும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்:

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருளிங்கநாதன், பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கற்கோவளம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்

இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து சிரமங்கள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version