ஹொரண கணேதென்ன பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் காட்டில் மீட்கப்பட்டுள்ளது.
5 அடி 8 அங்குலம் உடைய 40 – 50 வயது மதிக்கதக்க குறித்த ஆணின் முகம் முற்றிலும் சிதைந்து அழுகிய நிலையிலுள்ளதுடன் அவரது ஆண்குறி வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த நபர் சார்ந்து தகவல்கள் தெரிந்தவர்கள் ஹொரண பொலிஸ் நிலையம் – 0342261222 அல்லது, பொலிஸ் தலைமையகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு – 0112436161 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment