டிஎன்ஏவின் (DNA) அமைப்பைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் , தனது 97ஆவது வயதில் காலமானார்.
ஜேம்ஸ் வாட்சன் 1953ஆம் ஆண்டில் பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் சேர்ந்து, டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் மாதிரி அமைப்பைக் கண்டுபிடித்தார். இது உயிரியல் துறையில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பிற்காக வாட்சன், கிரிக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins) ஆகிய மூவரும் இணைந்து 1962ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

