images 5 7
செய்திகள்இலங்கை

தை பிறந்தும் வழி பிறக்கவில்லை: தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாகச் சாடிய சாணக்கியன் எம்பி!

Share

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த அரசியல் நம்பிக்கைகள், தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் ஐயா ஒரு காலத்தில் கூறிய தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லது தீபாவளிக்குள் தீர்வு போன்ற கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னணியை சாணக்கியன் விளக்கினார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் தீர்வை எட்டுவதற்கான உண்மையான மற்றும் தீவிரமான நகர்வுகள் இடம்பெற்றன. அந்தச் சூழல் வழங்கிய நம்பிக்கையிலேயே சம்பந்தன் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்ததாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அவர் சாடியுள்ளார்.

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஒரு தெரிவுக்குழுவை நியமித்து, தேர்தலை எப்படி நடத்துவது என்று இன்னும் ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பேசும்போது வரவேற்கத்தக்க விடயங்களைக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்களை விடவும் மோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்போதைய ஆட்சியிலும் தொடர்வதாகக் குறிப்பிட்ட சாணக்கியன், வெறும் வார்த்தைகளால் ஏமாற்றாமல் காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...