24 661f66387e66a md
செய்திகள்இலங்கை

ரூபாயும் இல்லை, டொலரும் இல்லை: பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வலு இலங்கையிடம் இல்லை – பந்துல குணவர்தன எச்சரிக்கை!

Share

இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான நிதி வலிமை தற்போது நாட்டிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து புள்ளிவிபரங்களை முன்வைத்தார்:

அரசாங்கத்தின் இந்த வருட வருமானம் 5.3 டிரில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் மீளெழும் செலவினம் (Recurrent Expenditure) 5.6 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் அடிப்படைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கே சுமார் 300 முதல் 400 பில்லியன் ரூபாய் வரை பற்றாக்குறை நிலவுகிறது.

நாட்டில் மண்சரிவு, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் யுத்தங்கள் போன்ற வெளிப்புறத் தாக்கங்கள் ஏற்பட்டாலோ, அந்த அதிர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான நிதி இருப்பு இலங்கையிடம் இல்லை.

“எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ரூபாயோ அல்லது சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான டொலர்களோ எம்மிடம் போதுமான அளவு இல்லை என்பதே நிதர்சனம்” என அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைக் கையாள்வதற்கு முறையான நிதி முகாமைத்துவம் அவசியம் என்பதையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...