ஆப்கானில் இனி மரங்களை வெட்ட முடியாது!

taliban

ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்டுவதற்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மொத்த நிலபரப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே காடுகளாகவுள்ளன.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள இந்துகுஷ் மலை தொடரில்தான் பெரும்பாலான காடுகள் காணப்படுகின்றன.

பழங்குடியின மக்கள் அந்த காடுகளை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மரங்களை வெட்ட மற்றும் அவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”மரங்களை வெட்டுவது, அவற்றை விற்பது மற்றும் கொண்டு செல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் அதை தடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version