செய்திகள்உலகம்

ஹிஜாப் விவகாரத்திற்கு முன்னுரிமையில்லை – மனுவை மறுத்த நீதிமன்றம்!!

Share

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஒரு கல்லூரி, ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மற்றொரு பிரிவு மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இதனால் மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தற்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க இருக்கிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்கு வெளியே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து பல மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து சொல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...