ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

Seeman 3

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

ஜனவரி 10-இல் வெளியாகவுள்ள ‘பராசக்தி’ படத்திற்குச் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், விஜய்யின் படத்திற்கு மட்டும் தாமதமாவது அரசியல் ரீதியான முடக்கமே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய சீமான், நான் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பைப் பார்த்துவிட்டேன். அதில் தணிக்கைச் சான்றிதழைத் தடுக்கும் அளவிற்கோ அல்லது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கோ எந்தச் சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை.

படத்திற்கு ஏதாவது ஒரு சான்றிதழை (U, A அல்லது U/A) வழங்கி உடனடியாகத் திரையிட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து இவ்வளவு காலம் இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படக் கலைக்கும், கலைஞர்களுக்கும் உரிய சுதந்திரத்தை வழங்கி, திட்டமிட்டபடி படத்தை வெளியிட அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version