பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
பிரான்சில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியைக் குறைக்கும் யோசனையை பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதுடன், மக்கள் போராட்டத்திலும் குதித்தனர்.
இதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தபோதிலும், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் அவரையே பிரதமராக நியமித்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு எதிராக 271 பேர் வாக்களித்தனர். தீர்மானம் வெற்றிபெறத் தேவையான 289 வாக்குகளைப் பெறத் தவறியதால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்து, பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுவின் பதவி தப்பியது.
எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.