உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் (Nine Arch Bridge) விளக்குத் திட்டத்தைத் திறப்பது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் (Central Cultural Fund – CCF) தெரிவித்துள்ளது.
பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிக்கு விளக்குகளைப் பொருத்துவதற்காக நிறுவப்பட்ட மின்மாற்றிக்கு மின்சாரம் வழங்கத் தேவையான மின் கேபிள்களை அனுமதிப்பதற்கு, ஒரு தனியார் நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட சர்ச்சையாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நிலன் கூரே (Nilan Cooray) கூறியுள்ளார்.
நிலன் கூரே மேலும் கூறுகையில், மின்சார இணைப்பைப் பாதுகாப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆனால், இந்தச் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விளக்குத் திட்டம், தற்போது புதிய திகதி எதுவும் அறிவிக்கப்படாமல் தாமதமாகியுள்ளதாக மத்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நிலன் கூரே தெரிவித்துள்ளார்.