பிரித்தானிய இளவரசி மேர்கன் மார்க்கெல் பிரத்தியேக தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரித்தானிய ஊடகமான மெயில் ஒன் சன்டே பத்திரிக்கை ஒரு யூரோ தண்டப்பணமாக வழங்கும் விசித்திர தீர்ப்பு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
மேர்கன் மார்க்கெல் அவரது தந்தைக்கு கடந்த 2018ம் ஆண்டு கைப்பட எழுதிய பிரத்தியேக கடிதம் ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட பத்திரிக்கை மற்றும் அதனுடன் இணைந்த செய்தி வலைத்தளமான மெயில் ஒன்லைன் ஆகியன தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை, உச்சநீதிமன்றில் நீண்டகால வாதாட்டத்துக்கான வழக்கினை கொண்டுசெல்லப்போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளன.
மேர்கனின் குறித்த கடிதத்தின் வெளியிட்டதற்கான வேறு ஓர் வழக்கிற்கான குறிப்பிடப்படாத தொகையினையும் இப்பத்திரிகை மற்றும் செய்தி நிறுவனம் வழங்கவுள்ளதாக பிரித்ததானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் தனியுரிமை மற்றும் பதிப்புரிமை குறித்த வழக்கில் குறித்த செய்தித்தாள் குழுமத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கிய அதேவேளை – இந்த வழக்கில் உள்ள பிரச்னைகள் மிகவும் தெளிவாக உள்ளமையால் முழுமையான விசாரணை தேவையில்லை எனக் கூறியது.
எனினும் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அசல் தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றது. எனினும் கடந்த டிசம்பர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குறித்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டிருந்தது.
குறித்த செய்திக் குழுமம் பதிப்புரிமை மீறலுக்காக ஒரு தொகையை செலுத்தவுள்ள அதேவேளை மெயில் ஒன் சன்டே மேகனின் சட்டச் செலவுகளில் £1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈடுசெய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டிய குறித்த தொகையானது ஓர் சிறிய அளவாக காணப்படும் போதும் மேகனின் நோக்கம் நஷ்ட ஈட்டைவிட ஒழுக்கம் பின்பற்றப்படுவதே என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.