WHO ஆல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரசுக்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரோன் ‘omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக நாடுகளே அஞ்சும் இவ் வைரஸ் இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் திறன் உள்ளதென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பிரிட்டன் ,இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் தென்னாபிரிக்க நாடுகளுக்கு தனது விமான சேவையினை நிறுத்தியுள்ளதோடு அவ் நாடுகளை தனது சிவப்புப்பட்டியலிலும் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world