பிரித்தானியாவில் இன்று முதல் ஒரு சில பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது 11 பேரை ஒமைக்ரோன் வைரஸ் பாதித்துள்ளது. இதனால் அரசு பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது
பிரதமர் போரிஸ்ஜோன்சன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் முகக்கவசம் ஒரு சில பகுதிகளில் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகககவசம் அணிய தேவையில்லை, உணவகங்கள், கபேக்கள்., பார்கள் மற்றும் பப்களில் இந்த விதிகள் பொருந்தாது இதை தவிர ஏனைய எல்ல இடங்களிலும் முககவசம் இல்லாமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.
உலக சுகாதார நிறுவனமும், இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவுகிறதா அல்லது தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை குறிப்பிடத்தக்கது.
#World