CMB 2 984x554 1
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்கவிற்கு வந்த புதிய நடைமுறை!!

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி  தெரிவித்தார்.

இதன்பிரகாரம் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் .

சலுகை பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே முனையத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் அந்த வளாகத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத்தில் வருகை தருபவர்களை வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...