ஜப்பானின் புதிய பிரதமர் – புமியோ கிஷிடா

mfile 1612780 1 L 20210929143341 1140x620 1

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.

64 வயதான இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார்.

தற்போதய பிரதமராக பதவி வகிக்கும் யோஷிஹிதே சுகா கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.

இதனடிப்படையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு நால்வர் போட்டியிட்டனர்.

இவர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Exit mobile version