2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (National Colleges of Education – NCOE) ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நேர்முகப்பரீட்சைகள் 2026 ஏப்ரல் 21 முதல் மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தமக்குரிய நேர்முகப்பரீட்சை திகதி மற்றும் நேரம் குறித்து அந்தந்தக் கல்லூரிகளில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நேர்முகப்பரீட்சைக்காகத் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.moe.gov.lk) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமது விபரங்களை இணையத்தளத்தின் ஊடாகச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பணிக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள், தமக்குரிய நேர்முகப்பரீட்சையின் போது தேவையான மூல ஆவணங்கள் மற்றும் அவற்றின் நிழற்படப் பிரதிகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்த கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

