யாழ்ப்பாணத்தில் கடற்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது இனந்தெரியாத நபரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் தபால் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், குறித்த நபர் தப்பி சென்றுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews