ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின் குழுவினர், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (நவம்பர் 11) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர்.
நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு. சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டப் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாமல் ராஜபக்ஷ சுதந்திரக் கட்சித் தலைமையகத்திற்கு வருகை தந்திருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.