திரையுலகிலிருந்து விடைபெற்று முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய் எப்போதும் தனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்களில் ஒருவர் என நாமல் ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் திரையுலகப் பயணமும், வெள்ளித்திரையில் அவர் வெளிப்படுத்திய துடிப்பான ஆற்றலும் தனித்துவமானவை என்றும், அவர் அரசியலுக்குச் செல்வதன் மூலம் சினிமா உலகம் அந்தத் துடிப்பையும் ஆளுமையையும் நிச்சயமாக இழக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது திரைப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு புதிய பயணத்தைத் (அரசியல்) தொடங்கும் விஜய்க்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் பெரும் வெற்றியும் சிறப்பும் கிடைக்க மனதார வாழ்த்துவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் விஜய்யின் வருகை குறித்து தெற்காசிய அரசியல் தளத்திலும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதை இந்தப் பதிவு காட்டுகிறது.

